Resumen del episodio
அமெரிக்காவில் நீடித்திருக்கும் இளைஞர் மனநல நெருக்கடியுடன், AI chatbots எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகளின் விரைவான விரிவாக்கமும் ஒருங்கே நிகழ்ந்துள்ளது. இது, மனநல ஆலோசனைக்காக இளைஞர்கள் எந்த அளவிற்கு இந்தத் தொழில்நுட்பத்தை நாடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. RAND என்ற ஆய்வு நிறுவனம், 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கப் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடையே மனநல ஆலோசனைக்காக AI உரையாடல் மென்பொருட்களைப் பயன்படுத்துவதன் பரவல், அதிர்வெண், உணரப்பட்ட பயன் மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவை குறித்த ஒரு ஆய்வறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வு மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் குறித்து, அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மனநல மருத்துவராகக் கடமையாற்றும் Dr மொஹமட் முஸ்தாக், MD அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Episodios
AI-யிடம் மனநல ஆலோசனை பெறுகிறீர்களா?
Escuchadoஅமெரிக்காவில் நீடித்திருக்கும் இளைஞர் மனநல நெருக்கடியுடன், AI chatbots எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகளின் விரைவான விரிவாக்கமும் ஒருங்கே நிகழ்ந்துள்ளது. இது, மனநல ஆலோசனைக்காக இளைஞர்கள் எந்த அளவிற்கு இந்தத் தொழில்நுட்பத்தை நாடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. RAND என்ற ஆய்வு நிறுவனம், 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கப் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடையே மனநல ஆலோசனைக்காக AI உரையாடல் மென்பொருட்களைப் பயன்படுத்துவதன் பரவல், அதிர்வெண், உணரப்பட்ட பயன் மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவை குறித்த ஒரு ஆய்வறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வு மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் குறித்து, அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மனநல மருத்துவராகக் கடமையாற்றும் Dr மொஹமட் முஸ்தாக், MD அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 07 ஒக்டோபர் 2026, புதன்கிழமை
EscuchadoSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
தமிழ் உள்ளிட்ட தெற்காசிய சமூகங்களில் ஏன் சில நோய்கள் அதிகம்? என்ன செய்யலாம்?
EscuchadoNSW Multicultural Health Week ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் தூதராக செயல்பட்டவர் NSW மாநிலத்தில் பணியாற்றும் GP - பொது மருத்துவர் டாக்டர் சாந்தினி தவசீலன். தெற்காசிய சமூகங்களில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் அவர், தமிழ் மக்கள் உள்ளிட்ட தெற்காசிய சமூகங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகள், சுகாதார சேவைகளை அணுகுவதில் உள்ள தடைகள், பாரம்பரிய மருத்துவப் பயன்பாடு மற்றும் மனநலம் குறித்து விளக்குகிறார். அவருடன் உரையாடியவர் றைசெல். Why some diseases more common in Tamil and other South Asian communities — and What can we do? NSW Multicultural Health Week was observed from 31 August to 6 September. One of its ambassadors was Dr Shanthini Thavaseelan, a GP practising in New South Wales. Actively involved in promoting health awareness among South Asian communities, she discusses the health issues affecting Tamil and other South Asian communities, barriers to accessing healthcare services, the use of traditional medicine, and mental health. She spoke with RaySel.
கைதுகள் தொடரும் நிலையில் இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
Escuchadoஇந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை மீனவர் அமைப்புகள் கண்டித்திருக்கும் நிலையில், இலங்கையில் தொடர்ந்து எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் கைதுகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Arrests continue as India–Sri Lanka fishermen talks are postponed
குடியேற்றத்தில் வரலாறு காணாத குறைப்பு: லிபரல்-நேஷனல் கூட்டணி அறிவிப்பு
Escuchadoகுடியேற்றம் தொடர்பான தனது புதிய கொள்கையை Coalition- எதிர்கட்சி கூட்டணி வெளியிட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ள நிகர வெளிநாட்டு குடியேற்ற எண்ணிக்கையை விட சுமார் 60 ஆயிரம் குறைவாக, அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை மட்டுமே அனுமதிப்பதை இலக்காகக் கொண்டுள்ள புதிய கொள்கையை Coalition அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast